சென்னை விமான நிலையத்தில் 3 பழைய விமானங்களை அகற்ற உத்தரவு அளித்துள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. 10-ம் தேதிக்குள் நேரில் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
VT-KAE(MSN-737), VT-KAF(MSN-738), VT-DKA(MSN-718)-M-ABFI ஆகிய 3 பதிவு நீக்கம் செய்யப்பட்ட விமானங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சென்னை விமான நிலையத்தில் கைவிடப்பட்டு விட்டதாகவும், இந்த கைவிடப்பட்ட விமானங்களின் தற்போதைய உரிமையாளர்கள் பொருந்தக்கூடிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்தி அவற்றை 10.02.2023 அன்று அல்லது அதற்கு முன் சென்னை விமான நிலைய வளாகத்தில் இருந்து அகற்றுமாறு பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
ஏஏஐ சட்டம் 1994ன் கீழ் மேற்கூறிய 3 விமானங்களை அகற்றுவதற்கான வெளியேற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது விசாரணை தேதி 10.02.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறும். விமான நிலைய இயக்குநரின் அலுவலகத்தில், உரிமையாளர்கள் விசாரணைக்கு வருமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறார்கள், இல்லையெனில் நடவடிக்கைகள் எக்ஸ்-பார்ட்டாக நடத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளனர்.