ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின்படி 5 பேர் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
அதன்படி பூந்தமல்லி காவல் பகுதியில் வழிப்பறி, கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மாங்காடு, கோவூர் மூகாம்பிகை நகரைச் சேர்ந்த மகேஷ் அருண், மாங்காடு, ஜனனி நகரைச் சேர்ந்த யஷ்வந்த் ராஜ் (வயது 23) , பூந்தமல்லி , எஸ்.பி.அவின்யூ , மலையம்பாக்கம் மெயின்ரோட்டைச் சேர்ந்த சத்தீஷ் (வயது 22), திருமுல்லைவாயல் காவல் பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள அம்பத்தூர் கள்ளிக்குப்பம், முருகப்பாடி , பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித் என்கிற அஜய் (வயது 26), ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரம்பூர் மதுரைசாமி மடம் தெரு, துர்க்கா ஆதித்தன் அபார்ட்மெண்ட் சேர்ந்த எட்வின் (வயது 44) ஆகிய 44 பேரும், குண்டர் தடுப்புக் காவலில் ஓர் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ads
ஜனவரி 1 முதல் இதுவரை ஆவடி காவல் ஆணையரகத்தில் 48 பேர் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.