தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு வெளியான யசோதா படத்துக்காக, தமிழ், தெலுங்கில் தலா 1 பேட்டி கொடுத்து படத்தின் ப்ரமோஷனை முடித்துக்கொண்டார். இதன் ஒரு பகுதியாக சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றுவந்தார். மேலும் தனது உடல்நிலை பாதிப்பு குறித்து பதிவிட்ட சமந்தா, ''போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
யசோதா படத்துக்கு பிறகு நடிகை சமந்தா நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் உருவாகியுள்ளது. குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மணிஷர்மா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
(ads)
தற்போது உடல்நலம் தேறிவரும் சமந்தா மீண்டும் உடற்பயிற்சில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தன்னுடைய பயிற்சியாளர் உடன் சமந்தா, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் நடிகை சமந்தா பழனி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு தன் உடல் நலம் குணமாக 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார். தற்போது இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
(ads)