பூந்தமல்லி பஸ் நிலையத்தில் நின்று இருந்த கேரளக்காரரிடம் 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி புறவழிச் சாலை பஸ் நிலையத்தில் டிராவல் பையுடன் ஒருவர் நீண்ட நேரம் நின்று இருந்தார்.அப்போது பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.மேலும் அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர்.
அந்த பையில் 9.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.உடனே போலீசாரை அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிடிப்பட்ட நபர் கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம், தோல்பட்டை பஞ்சாயத்து , திருநெல் கிராமம், கண்டத்துள் ஹவுஸ் என்ற இடத்தைச் சேர்ந்த ஷாக் சக்கிரியா (வயது 50) என்று தெரிய வந்தது.இதனால் போலீசார் அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஸ்டாலின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார்.அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.