திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் புத்தனாம்பட்டி ஊராட்சியில் துணை சுகாதார நிலையத்திற்கு 24 சென்ட் இடம் 1050 அடி சதுர அடி கொண்ட கட்டிடம் உள்ளிட்டவற்றை அந்த இடத்தில் உரிமையாளரான திரு.கந்தசாமிபிள்ளை குடும்பத்தினரால் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறைக்கு தானமாக வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் கிராமப்புற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மக்கள் நல்வாழ்வு துறையின் துணை சுகாதார நிலையம் திறப்பு விழா முசிறி ஊராட்சி ஒன்றிய சேர்மன் திருமதி மாலா ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் துணை சேர்மன் புத்தனாம்பட்டி என்.ரமேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சுப்பிரமணி அவர்கள் வரவேற்புடன் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியின் தலைவர் திரு.பாலசுப்பிரமணியன் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சந்திரசேகரன் அவர்கள் வட்டார மருத்துவ அலுவலர் நரேந்திரர் அவர்கள் வட்டார மருத்துவர் கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இடத்தை அர்ப்பணித்த வீராணியார் திரு.சபரீசன் குடும்பத்தினர் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவிற்கு நன்றி உரையாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபாகரன் உரையாற்றினார்.
நிகழ்வில் சுகாதார மேற்பார்வையாளர் சுகாதார பணியாளர்கள் வட்டார சுகாதார அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் திருவாளர்கள் பிரபு அருணராஜ் தனலட்சுமி வேதவள்ளி செல்வராணி ஊராட்சி செயலாளர் ரங்கநாதன் மக்கள் நலப் பணியாளர் வீரமலை மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.