அரியலூர் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி போட்டி அரியலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் சுமார் 40 கல்லூரிகள் கலந்து கொண்டன.இந்த முதலமைச்சர் கோப்பை காண கபாடி போட்டியை மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி அவர்கள் முன்னிலை வகித்து மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
இந்த விறுவிறுப்பான கபாடி போட்டியில் மீனாட்சி ராமசாமி கல்லூரி மாணவ மாணவிகளும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிகபாடி களத்தில் இருவருப்பாக விளையாடினர் இந்த கபாடியில் முதல் பரிசை மீனாட்சி ராமசாமி கல்லூரியும் இறுதிக்கட்டத்திற்கு அதீத முன்னேற்றத்தில் முன்னேறிய அன்னை தெரசா நர்சிங் கல்லூரி இரண்டாம் இடத்தை வாகை சூடியது இரண்டாம் இடம் பெற்ற அன்னை தெரசா நர்சிங் கல்லூரி அணி சுமார் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வென்றது.
இந்த நிகழ்வில் அன்னை தெரசா கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் மற்றும் நிறுவனர் கௌதம சரவணன் முன்னிலை வகித்தனர்.