பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,பாடாலூர் அருகே மண் சாலையில் இருந்த அரியவகை நட்சத்திர ஆமையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.
ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் மலைப்பகுதியையொட்டி மன்னார்கோவில் செல்லும் மண் சாலையில் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மண் சாலையில் அரியவகை நட்சத்திர ஆமை ஒன்று சாலையை கடந்து சென்று கொண்டிருந்தது.அதனை மீட்ட அவர்,உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் வனக்காப்பாளர் மணிகண்டன் என்பவரிடம் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது.
இந்த பகுதியில் இதுவரை 3 நட்சத்திர ஆமைகள் பொது மக்களால் மீட்கப்பட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டடுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிக ஆச்சரியத்தை உண்டாக்குகிறது அதிகப்படியான நட்சத்திர ஆமைகள் இந்த பகுதியில் நடமாடுவது பொதுமக்களிடம் சந்தோஷமாகவும் உள்ளதாக கருது தெரிவிக்கின்றனர்.
#நாட்டார்மங்கலம்_மண்_சாலையில்_அரியவகை_நட்சத்திர_ஆமை_மீட்பு