செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு உட்கோட்டம், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாமண்டூரில் உள்ள மகேந்திரன் ஓட்டல் கட்டிடத்தில், சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.A.பிரதீப், I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில், செங்கல்பட்டு உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.A.பரத் அவர்களின் மேற்பார்வையில், படாளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.சத்தியவாணி அவர்களின் தலைமையில், தனிப்படை காவல் அதிகாரிகள் 11.02.2023 இரவு 0030 மணிஅளவில் மேற்படி இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த செங்கல்பட்டை சார்ந்த பவுல் ஸ்டாலின் ஜெபக்குமார் மற்றும் ராஜி ஆகியோர்கள் உட்பட 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி சோதனையில் சூதாட்டத்திற்கு வைத்திருந்த ரூபாய்.3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம்) பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோல் சட்ட விரோதமாக சூதாட்ட செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.