காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எத்திராஜ். இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், இவரது கடைசி மகனான ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான நிலத்தை தமக்கு பிரித்து கொடுக்குமாறு தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 06.02.2023 இரவு எத்திராஜ் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ராமச்சந்திரன் நிலம் குறித்து கேட்டு பிரச்சினை செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ராமச்சந்திரனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 07.02.2023 காலை எத்திராஜ் வயலுக்கு செல்வதற்காக சங்கராபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு லாரி ஓட்டி வந்த ராமச்சந்திரன், தந்தை மீது இருந்த கோபத்தில் அவர் மீது லாரியை ஏற்றிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ராமச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராமச்சந்திரனை கைது செய்தனர்.
#mathinews #mathitamil #mathinews