'பஞ்ச' என்றால் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கிறது. 'சீலம்' என்றால் ஒழுக்கம் என்பது பொருள். இந்த ஓழுக்கமானது, மூவகைப்படும். அவற்றில் ஒரு தத்துவத்தை, புத்தமதத்தில், பஞ்ச சீலம் என அழைக்கின்றனர். பஞ்சசீலம் என்பது புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடுகளாக அமைந்துள்ளது
பஞ்ச சீலம்
இல்லற வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என பின்வருவன குறிக்கப்படுகின்றன. கீழ்கண்ட ஐந்து ஒழுக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. எனவே, இந்த ஓழுக்கங்கள் பஞ்ச சீலம் என்றழைக்கப்படுகிறது.
ஓர் உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.
பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
மது வகைகளை உண்ணாது இருத்தல்.
பொய் பேசாது இருத்தல்.