பெரணமல்லூர், அருகே உள்ள மோசவாடி, கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ராஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணிராஜா, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை பைக்கில் மோசவாடி கிராமத்தில் இருந்து கோழிப்புலியூர், சென்று மீண்டும் பைக்கில் மோசவாடி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.அப்போது பகவந்தபுரம், கூட்டுரோடு அருகே சென்ற போது நிலை பைக் தடுமாறிய சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இதில் ராஜாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்தோணி ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராஜாவை, மீட்டு செய்யாறு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜா, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து பெரணமல்லூர் போலீஸ் நிலையத்தில் ராஜாவின், தந்தை ராஜாமணி, புகார் அளித்தார். புகாரின் பேரில் பெரணமல்லூர், போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.