பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57.
சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு ரமேஷ் கண்ணா, மனோ பாலா உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.