ஹோலி கொண்டாட்டத்தின் போது குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியாகினர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ரட்டிலம் மாவட்டம் இசர்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது புதுமணப்பெண், ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு அங்குள்ள குளத்தில் தனது கணவருடன் (23) குளிக்க சென்றார். அவர்களுடன் பெண்ணின் தம்பி (13), தங்கையும் (10) சென்றனர்.
முதலில் அந்த இளம்பெண் குளத்தில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் ஆழமான இடத்திற்கு சென்றுவிட்டார். இதனால் அவர் நீரில் தத்தளித்தார். இதனை கண்ட அந்த பெண்ணின் தம்பி மற்றும் தங்கை இருவரும் அடுத்தடுத்து குளத்தில் குதித்து அக்காவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் அவர்களும் உயிருக்கு போராடினர். அந்த பெண்ணின் கணவரும், அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதனால் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இறந்த தம்பதிக்கு 2 வாரங்கள் முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தில் நேர்ந்த பரிதாபம்: குளத்தில் மூழ்கி புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி..! Mathi News Tamil - மதி செய்திகள்