விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் : சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டி
திருவள்ளூர் அருகே ஈக்காடு பகுதியில் வசிக்கும் இஸ்மாயில் என்பவர் ஈக்காடு மசூதி எதிரே பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜக கொடியேற்ற திட்டமிடப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக ஓ பி சி மாவட்ட பொதுச் செயலாளர் குமரன் ஏற்பாடு செய்திருந்தார்
இந்த நிலையில் மசூதி எதிரே பாஜக கொடி ஏற்றுவதற்கு மசூதி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனை தொடர்ந்து பாஜக கொடி ஏற்றுவதற்காக வந்த வேலூர் இப்ராஹீமை திருவள்ளூர் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்,
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு ஈக்காடு மசூதி பகுதியிலும் திருவள்ளூரிலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்
காவல்துறையினர் திமுகவினரின் கைப்பாவையாக செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சில முஸ்லிம் அமைப்புகளில் வார்த்தைகளை கேட்டு காவல்துறையினர் பாஜக கொடி ஏற்றுவதற்கு தடுத்து நிறுத்தி இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்
மேலும் இன்னும் ஒரு வாரத்திற்குள்ளாக ஈக்காடு பகுதியில் வசிக்கும் சிறுபான்மை மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க உள்ளதாகவும் காவல்துறை முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும் எனவும் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்
பாஜக தன் தடம் மாறாமல் செயல்படுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரு உதவியாக இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மாநில தலைவர் அண்ணாமலையின் கண் அசைவுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் : கோதண்டன்