கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாதிய ஆதிக்க பிரிவினர் ஒன்றுகூடி தலித் சமூக இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி தலித் பகுதியில் உள்ள சாமி சிலையை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ட்ராக்டரில், மேளதாளம் இசைக்க ஸ்பீக்கரில் பாட்டு போட்டுக் கொண்டு ஊர்வலமாக மாசி மக திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குக் கிள்ளை கடற்கரைக்கு எடுத்துச் சென்று அங்கு வழிபாடு செய்து திங்கள்கிழமை இரவு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
Video
அப்போது அவர்கள் வரும் வழியில் மேலமணக்குடி என்ற இடத்திற்கு வரும்போது கர்ணன் பட பாடலான கண்டா வரச் சொல்லுங்க பாடல் ஸ்பீக்கரில் ஒலித்துள்ளது. அந்நேரத்தில் சாலையில் நின்றுகொண்டிருந்த சாதிய ஆதிக்க பிரிவினர் தலித் சமூக இளைஞர்களிடம் எங்கள் இடத்திற்கு வந்து இந்த பாட்டை போட்டு ஆடுவதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இ
தில் தலித் இளைஞர்களை சாதிரீதியாக இழிவுபடுத்தி அவதூராக திட்டியுள்ளனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த வடக்குதிட்டை, தெற்குதிட்டை, மேலமணக்குடி, மணவெளி உள்ளிட்ட பகுதியில் உள்ள வன்னியர் சமூக இளைஞர்கள் ஒன்றுகூடி தலித் சமூக இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்களுக்கு தலை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தம் வந்ததை பார்த்து செத்துவிடுவார்கள் எனக்கருதி அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்திலேயே புவனகிரி அரசு மருத்துவமனை வாசலில் அழைத்து வந்து போட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சாத்தபாடி தலித் பகுதி மக்கள் சம்பவத்தில் தொடர்புடைய சாதிய ஆதிக்க பிரிவினர் 4 பேரை பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பதற்காக அதேபகுதியில் உள்ள கோவிலில் வைத்திருந்துள்ளனர்.
இதனையறிந்த சாதிய ஆதிக்க பிரிவினர் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சுகுமார் என்பவரின் மகன் சுரேந்தர் (16) மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி சுரேந்தர் அவரது தந்தை சுதாகர் அம்மா செல்வமணி ஆகியோர்களை இறங்க கூறியுள்ளனர். பின்னர் மறுத்ததால் ஆம்புலன்ஸ் உள்ளே ஏறி அதில் இருந்தவர்களை சாதி பெயரை கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் – குறிஞ்சிபாடி சாலையில் தலித் மக்கள் இரவு நேரத்தில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இதில் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்கள் ரகுநாத், நித்திஷ், அன்பு செழியன், நவீன், சாரங்கபாணி மற்றும் ஆம்புலன்ஸில் தாக்குதலுக்கு உள்ளான சுரேந்தர் அவரது தந்தை சுகுமார் அவரது அம்மா செல்வமணி மற்றும் சாதிய ஆதிக்க பிரிவினர் தரப்பில் காயம் அடைந்த அஜித் உள்ளிட்டவர்கள் சிதம்பரம் ராஜ முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புவனகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.