ஏமன் நாட்டிற்க்கு வேலைக்கு சென்ற மகன் உயிருக்கு ஆபாத்து உள்ளதாக கூறி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் வில்லியம் லுமிஸ் என்பவர் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது :
எனது மகன் தினகரன் விஜய் 13-11-2022 அன்று Trans continental traders எந்த நிறுவனத்தில் மூலம் கார் வாஷிங் பணிக்காக ஏமன் நாட்டிற்கு சென்றார் அங்கு அவரிடம் ஆவணங்களை வாங்கிக்கொண்டு தனி அறையில் அடைத்து சித்திரவதை செய்து சரிவர உணவு வழங்காமல் வேலையும் வழங்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த இந்த நிறுவனத்தின் மூலம் 2 லட்சம் பணம் கேட்டு எங்களை மிரட்டுகின்றன எனது மகனை மீட்டு தர வேண்டுகிறேன் என தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்: கோதண்டன்
மாவட்ட ஆட்சியரிடம் மகனை மீட்டு தர கோரி மனு - திருவள்ளூர் - மதி செய்திகள் - mathi news