திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாங்கால் கூட்ரோடு வாசவி நகரை சேர்ந்தவர் தியாகராஜன். அவரது மனைவி கிருபா என்கிற ரம்யா (வயது 29). இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ரம்யா கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வெகுநேரமாகியும் அறையில் இருந்து ரம்யா வராததால் உறவினர்கள் கதவை தட்டினர். அப்பவும் அவர் வெளியே வரவில்லை. இதனால் உறவினர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ேள சென்று பார்த்த போது, ரம்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News: ஏழுமலை