ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து இரண்டாம் முறையாக விளக்கம் கேட்டு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், டிசம்பர் 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில் இரண்டாம் முறையாக விளக்கம் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
advertisement
ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி - MathiNews - மதி செய்திகள்