பெரம்பலூர் அருகே பள்ளியில் மயங்கி விழுந்து மாணவன் பலி - mathinews.com
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் மஹவின் (16). தேனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தான். மஹவினுக்கு கடந்த ஆண்டு 10ம் வகுப்பு படிக்கும் போது இதய பிரச்னை இருப்பது தெரிய வந்தது. அதற்காக சென்னையில் 3 மாதம் சிகிச்சை பெற்றுள்ளார்.இந்நிலையில் நேற்று பள்ளியில் பாடங்களை கவனித்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் வருவதாக ஆசிரியரிடம் மஹவின் கூறியுள்ளார். உடனடியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.