தளபதி விஜய், திரிஷா இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லி, 20 வருடங்கள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நான்கு நாட்களில் ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வியக்க வைக்கும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வசூலில் சாதனை படைத்து வருகிறது
இப்படம் தமிழக பாக்ஸ் ஆபிஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இப்படம், ரீ-ரிலீஸிலும் உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பதிவு செய்துள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நான்கு நாட்களில் இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் இரண்டு புதிய பாலிவுட் படங்களின் மொத்த வசூலை விட அதிகமாக உள்ளது.
தென்னிந்திய ரீ-ரிலீஸ்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் 'கில்லி' பதிவு செய்துள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட டைட்டானிக் 3டி, அவதார் ரீ-ரிலீஸ் மற்றும் ஷோலே 3டி போன்ற படங்களையும் முறியடித்துள்ளது.
உலகம் முழுவதும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.20 கோடியை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு படத்தின் உள்நாட்டு வசூல் சுமார் 10.50 கோடியாக உள்ளது.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews