திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற கோவிந்தராஜனின் மகள் ஜெய ஸ்ரீ (வயது 19). திருச்சியில் உள்ள தனியார் கலைக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் ஜெய ஸ்ரீ அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வடக்கு சித்திர வீதியில் உள்ள கிஷோரின் நண்பர் ஒருவரது வீட்டு மாடியில் நின்று கிஷோர், ஜெய ஸ்ரீ மற்றும் கிஷோரின் நண்பர்கள் சிலர் நின்று பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது ஜெய ஸ்ரீ திடீரென மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கீழே குதித்த இளம் பெண் ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்தள்ளார். உடனடியாக அப்பெண்ணை கிஷோர், நண்பர்கள் சேர்ந்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக திருச்சி தலைமை அரசு மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லுமாளு மருத்துவர்கள் அறிவறுத்தி உள்ளனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இளம் பெண் உயிரிழந்தைத் தொடர்ந்து உடன் இருந்த காதலன், நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணின் தந்தை கோவிந்தராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காதலன், காதலனின் நண்பர்கள் என மொத்தமாக 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சரித்திர குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றவர்கள் என்பது தெரிய வந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், இது தற்கொலையா? அல்லது திட்டமிடப்பட்ட கொலையா? என விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், இளம் பெண்ணும், கிஷோரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாகவும், தற்போது தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் வலியுறுத்திய நிலையில், அதற்கு காதலன் மறுப்பு தெரிவிக்கவே மனமுடைந் ஜெய ஸ்ரீ மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் கிஷோரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews