ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள கூலி திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்க உள்ள சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகி, அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆனார். கைதி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்த லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து மாஸ்டர் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கினார். இப்படமும் ஹிட் ஆனதை தொடர்ந்து தனது குருவான கமல்ஹாசன் உடன் கூட்டணி அமைத்தார் லோகி.
தொடர் தோல்விகளுக்கு பின் நான்கு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த கமல்ஹாசனுக்கு தரமான கம்பேக் படமாக விக்ரம் படத்தை அமைத்துக் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் முடித்த கையோடு நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கினார். அப்படம் பான் இந்தியா அளவில் மாஸ் ஹிட் அடித்ததோடு மட்டுமின்றி 600 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
இதையும் படியுங்கள்:கதிகலங்க வைத்த இளம்பெண்ணின் மர்ம மரணம்- திருச்சியில் காதலன் அதிரடி கைது-mathinews-tamil | https://www.mathinews.com/2024/04/mathinews-tamil.html
லியோ படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் கூட்டணி அமைத்தார். சூப்பர்ஸ்டாரின் 171-வது படமான இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு நேற்று மாஸ் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தை இயக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ள சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதன்படி கூலி படத்துக்காக அவர் ரூ.60 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம். இதற்கு முன்னர் வந்த லியோ படத்துக்கு ரூ.50 கோடி வாங்கிய லோகி, தற்போது கூலி படத்துக்காக 60 கோடிக்கு தாவி உள்ளார். இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குனர் பட்டியலில் இயக்குனர் ஷங்கரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews