திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் நால்ரோடு அருகே உள்ளது.
இந்த தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் இன்று மிதந்தன. அந்த இரண்டு சடலங்களை மீட்டு சமயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலிருந்து பல பக்தர்கள் அன்றாடம் வந்து செல்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews