தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் அந்த மாநாட்டிற்கு கார், பஸ், வேன் மூலம் சென்றனர்
தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கலைகோவன் இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோரும் காரில் விக்ரவாண்டி சென்று கொண்டிருந்தனர். விக்ரவாண்டி செல்லும் வழியில் அவர்களுடைய கார் விபத்தில் சிக்கியது. அதில் கலைக்கோவன், சீனிவாசன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரது உடலும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு திருச்சிக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி மாநகரம் உறையூரில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் கலைப்கோவன் இல்லத்தில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்த உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி செலுத்தி அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews