மண்ணச்சநல்லூர் மேல அக்ரஹார வீதியில் பஜனை மடத்தின் பின்பகுதியில் இருந்து கழிவுநீர் அவ்வப்போது தெருக்கள் முழுக்க ஆறு போல் ஓடுகின்றன இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த மனவேதனையுடன் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை பயணித்து வருகின்றனர் நோய் தொற்று பரவும் அபாயம் சுகாதாரக் கேடை உண்டு பண்ணும் நிலையில் உள்ளன.
அக்ரஹாரத்தின் பின்பகுதியில் உள்ள சாக்கடை அதாவது புள்ளம்பாடி ஆற்றுக் கரை ஓரமாக உள்ள வீடுகளின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் திரும்ப வீடுகளுக்கே எதுத்து வருகின்றன முறையாக குப்பை அகற்றி தூர்வாரி நீரோட்டத்தை முறையாக செய்யவில்லை இதற்கு நிரந்தர தீர்வு எடுக்கவில்லை .
பலமுறை தொலைபேசியிலும் நேரிலும் தகவலை தெரிவித்தும் மனு கொடுத்தும் எந்த ஒரு பயனும் இல்லை .
பேரூராட்சியின் அலட்சியப் போக்கின் காரணமாக மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
அதீத தேவையாக கழிவு நீர் வீட்டிற்குள் வருவதை தடுக்கும் விதமாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.