செய்தியாளர் : ராஜேந்திரன்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்ட நிலையில் டார்ச் லைட் மற்றும் கைப்பேசி வெளிச்சத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் மருத்துவர்கள். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
சம்பவத்தின்படி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இடுக்கொரை பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக கொண்டு சென்றுசேர்த்துள்ளனர்
அங்கு அச்சமயத்தில் மின்சாரம் முற்றுலுமாக துண்டிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அப்போதும் ஜெனரேட்டர் ஆன் செய்யாமல் மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில்தான் மருத்தவமனை புணரமைக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. அப்படியிருந்தும் மருத்துவர்கள் டார்ச் லைட் மற்றும் கைப்பேசி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews