BanEVM உட்பட மக்களுக்காகப் போராடும் கட்சியின் 6 முக்கிய கொள்கைகளை விளக்கி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்காக மதுரையில் இருந்து கடந்த 11.12.24 முதல் நடைபயணம் மேற்கொண்டு வரும் நந்தினி குணா இருவரும் இன்று (20.12.24) ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 8 நாட்கள் நடைபயணம் செல்ல அனுமதித்த திமுக அரசின் காவல்துறை நடைபயணத்துக்கு அனுமதி இல்லை எனச்சொல்லி 9 வது நாள் கைது செய்துள்ளது.
மக்களுக்காகப் போராடும் கட்சியின் நடைபயணத்துக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்டு அச்சமடைந்து பாசிச RSS- பாஜக கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை நடைபயணத்துக்கு தடை போடுகிறது. தடைகளையும் அடக்குமுறைகளையும் மீறி மக்களுக்காகப் போராடும் கட்சியை பேரெழுச்சியுடன் உருவாக்குவோம் என
மக்களுக்காகப் போராடும் கட்சி
தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews