திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருந்து நிறுத்தம் பின்புறம் அரசு மதுபான கடை உள்ளது 15 மீட்டர் அருகில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது .
பேருந்துக்காக காத்திருக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மது பிரியர்களால் அங்கு நிற்பதற்கு அச்சம் ஏற்படுகிறது அடிக்கடி லாரியில் சாலை நடுவே மது பாட்டில் பெட்டிகள் இறக்கிக் கொண்டு இருப்பதால் பொது போக்குவரத்து மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி இடையூறு ஏற்படுகின்றன .
இதற்கு முன்பே சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி சமீபத்தில் ஒரு உத்தரவை பிறப்பித்தார் பள்ளிக்கூடத்திற்கு 15 மீட்டர் அருகில் உள்ள மதுபானக்கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார் இதுவரை தமிழ்நாடு அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இதுவரைக்கும் எந்த ஒரு மதுபான கடைகளிலும் அகற்றாமல் இருப்பது பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையாக உள்ளது .
உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவை மதிக்காத செயல்படுத்தாத அரசுத்துறை அதிகாரிகளை தயவு தாச்சனையின்றி அரசு பணியில் இருந்து அவர்களை முழுமையாக நீக்க வேண்டும் எந்த ஒரு அரசு சலுகையும் அவர்களுக்கு வழங்க கூடாது என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிருபர் க.முத்து.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews