திருவள்ளூர் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து இருப்பதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,
நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் வாங்கியும் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்திருப்பதாகவும் அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர்.
அப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நம்பியே விவசாயிகள் இருந்து வருகின்றனர்
ஆண்டுக்கு இரண்டு போகம் நெற்பயிர் விவசாயம் செய்யும் அவர்கள் இந்த ஆண்டு இரண்டாம் போகம் விவசாயம் 30 ஏக்கரில் செய்துள்ளனர்.
ஏக்கருக்கு 17000 ரூபாய் செலவு செய்து நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்து வந்தது
அறுவடை இயந்திரம் கிடைக்காததால் அறுவடை செய்யாமல் விவசாயிகள் காத்திருந்த நிலையில் தற்போது பெய்த கனமழை விவசாயிகள் வாழ்வாதாரத்தை முழுவதாக அழித்துள்ளது.
கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியும் சில நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளது
நகைகள் அடகு வைத்தும் கடன் வாங்கியும்
நடவு செய்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழைநீரில் சேதம் அடைந்திருப்பதை கண்டு விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்
குழந்தை போன்று பார்த்து இரவு பகலாக காவல் காத்து நெற்பயிர்களை பாதுகாத்து வந்ததாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பெய்த மழையால் சேதமடைந்து உள்ளதாகவும்
நகைகளை அடகு வைத்தும் வட்டிக்கு கடன் வாங்கியும் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை கண்டு விவசாயிகள் கண்ணீருடன் கவலை தெரிவித்துள்ளனர்,
அரசு உரிய இழப்பீடு தொகை வழங்கிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு நிருபர் : ஏழுமலை
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews