புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக உள்ள வசுந்தராதேவி அவர்களுக்கு அரசு மதுக்கடைகளில் அரசு தொகையை மிஞ்சி வசூல் செய்யும் வசூல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கும் கீரனூரைச் சேர்ந்த மதுக்கடை மேற்பார்வையாளர் திரு. ரவிக்குமார் மற்றும் அவரது அண்ணன் கண்ணன் ஆகியோர் கீரனூர் பேருந்து நிலையம் அருகில் நடத்தும் டாஸ்மார்க் பார் நடத்தி வருகின்றனர்.
மற்றும் அவரது உறவினர் நடத்தும் பாருக்கும் தடை செய்யப்பட்ட மதுவை சட்டத்தை மீறி கொண்டுவரப்பட்டு 1800 மேற்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்கள் புதுக்கோட்டை மாவட்டம் ராப்புசல் கிராமத்தில் கீரனூர் காவல்துறையினர் அதிரடி காட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் ஏன் இந்த சம்பவம் தெரியவில்லை மற்றும்இதிலும் புதுக்கோட்டை டாஸ்மார்க் (மதுக்கடை) மேலாளருக்கு பங்கு உள்ளதா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம் இல்லை இது போன்ற அவல நிலைகள் தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews