திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திற்குட்பட்ட பாலையூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் சுமார் 3.61 ஏர்ஸ் நிலம் குடியிருப்புக்காக பட்டா வழங்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வருகின்றன.
இந்த குடியிருப்பில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதேனும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது ஒரு கேள்வி குறியாக தான் உள்ளது.
இந்த குடியிருப்புகளின் அருகில் சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேலாக மழைநீர் தேங்கியுள்ளது இந்த மழை நீரை அகற்ற முடியாமல் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்து ஆடு மாடுகள் சேதமுற்று மனிதர்கள் நோய்வாய்ப்புற்று குடியிருக்க தகுதியற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அரை கிலோ மீட்டருக்கு மேலாக மழை நீர் ஒரு மாதமாக தேங்கி உள்ளது . இதை கிராம நிர்வாக கண்டு கொள்ளவில்லை மற்றும் ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை .
விஷ ஜந்துக்கள் , பாம்பு , தேள், என தண்ணீரில் வருகின்றது மற்றும் மக்கள் நோய்வாய்ப்பிலேயே உள்ளனர்.
இந்த மழை நீரை வாய்க்கால் எடுத்து சரி செய்யுமாறு பலமுறை கிராம நிர்வாகத்திடம் முறையிட்டும் கிராம நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
மாவட்ட ஆட்சியர் இந்த அவல போக்கை சரி செய்து தருவாரா என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கையை எடுத்து இந்த மழை நீரை அப்புறப்படுத்தி தருமாறு பொதுமக்கள் கண்ணீருடன் கேட்டுக்கொள்கின்றனர்.
பாலையூர் ஊராட்சி நிர்வாகம் மிகவும் அவல நிலையில் இருப்பதை இந்த சம்பவம் நினைவுபடுத்திக் கொண்டே உள்ளது ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் என்ற பொறுப்பும் வார்டு நம்பர் என்ற பொறுப்பும் கனவிலேயே நிர்வாகத்தை நடத்தி வரும் போக்கை , மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் மக்களை அவல நிலையில் தள்ளுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி மாவட்ட நிர்வாகம் மக்களை புறக்கணிப்பது எதுவாக இருக்கும் என்பது அப்பகுதி மக்கள் இருக்கும் பகுதிக்கு தெரு பெயர் கூட இல்லாமல் சாதியின் அடையாளத்தை பெயராக கொண்டு பெயர் பலகை பொறிக்கப்பட்டு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தமிழ்நாட்டின் உச்சகட்ட கேவலமான நிலையாக கருதப்படுகிறது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
Mathi Media Network
www.mathinews.com
@Topnews #Newstamil #mathinews #Treanding #tamilnews #indianews #tamil #crimenews