திருவள்ளூர் அருகே திருமணமான இளைஞருடன் கல்லூரி மாணவி காதல் செய்வதை பெற்றோர்கள் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தண்ணிர்குளம் ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்
மகள் ஆர்த்தி -21 இவர் சென்னை பக்தவச்சலம் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆர்த்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆட்டோ ஓட்டுனருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதல் விவகாரம் இரு வீட்டருக்கும் தெரிய வந்துள்ளது.
மாணவி ஆட்டோ ஓட்டுனரை திருமணம் செய்து கொள்ள கூறியதால் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிய வருகிறது.
காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது .
இதனால் மாணவி நேற்று வீட்டில் அறையில் படிப்பதற்காக சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் அறைய விட்டு வெளியே வராதது கண்ட பெற்றோர்கள்
கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து திறந்த போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதற்கு முன்பு ஏற்கனவே ஆட்டோ ஓட்டுனர் மீது மாணவியின் பெற்றோர்கள் திருவள்ளுர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராமபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Special reporter: elumalai